நியூசிலாந்து டி20 குழாமில் மீண்டும் கைல் ஜேமிசன், பென் சியர்ஸ்

 

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான சேப்பல்-ஹாட்லி(Chappell-Hadlee ) கிண்ண டி20 தொடருக்கான நியூசிலாந்து குழாமில் கைல் ஜேமிசன் மற்றும் பென் சியர்ஸ் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஜேமிசன் தனது முதல் குழந்தை பிறந்ததால் சமீபத்திய சிம்பாப்வே சுற்றுப்பயணத்தைத் தவறவிட்டார்.

அதே நேரத்தில் பென் சியர்ஸ் உபாதை காரணமாக சிம்பாப்வே சுற்றுப்பயணத்திலிருந்து விலக்கப்பட்டார்.

இந்தநிலையில் மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையிலான நியூசிலாந்து குழாமில் மார்க் சாப்மேன், டெவன் கான்வே, ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபோல்க்ஸ், மேட் ஹென்றி, பெவன் ஜேக்கப்ஸ், கைல் ஜேமீசன், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, டிம் ரொபின்சன், பென் சியர்ஸ், டிம் சீஃபர்ட் மற்றும் இஷ் சோதி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதன்படி இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டி20 போட்டி எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.