நிதி மோசடி வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

நிதி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் இலங்கையில் பிறந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்குலின் பெர்னாண்டஸின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ் இந்த வழக்கிலிருந்து தன்னை நீக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இது போன்ற நிவாரணம் பெற இது சரியான நேரம் அல்ல என்று கூறி அவரது வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது மிரட்டி பணம் பறித்ததற்கான முக்கிய குற்றச்சாட்டு எதுவும் இல்லை என்றும், அவர் பணமோசடி செய்ததாக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸின் சட்டத்தரணி வாதிட்டனர்.

இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், அவருக்கு எதிரான விசாரணை தொடரும் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.