
நிதி அமைச்சின் அவசர முடிவு
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் நிதி விவகாரங்கள் மீதான அதிகாரத்தை, நிதி அமைச்சு அவசரமாக துணை கணக்காய்வாளரிடம் ஒப்படைத்துள்ளது.
ஆங்கில ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பதில் ஏற்பட்ட தாமதம் பணியாளர்களின் வேதனத்தை கூட செலுத்த முடியாமல் போகும் அபாயத்தை ஏற்படுத்தியதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த சில மாதங்களாக கணக்காய்வாளர் பதவி வெற்றிடமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
