நாளை முதல் வழமைக்குத் திரும்பும் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள்

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் வழமைக்கு திரும்புகின்றன.

சீரற்ற வானிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்று திங்கட்கிழமை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட்டு வழமைபோல் கல்வி செயற்பாடுகள் நடைபெறும் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்தார்.