நாளை முதல் மற்றுமொரு ரயில் சேவை
எல்ல பகுதியைப் பார்த்து மகிழ்வதற்கு மற்றுமொரு ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து பதுளை வரை குறித்த ரயில் நாளை சனிக்கிழமை முதல் பயணிக்குமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் எல்ல பகுதிக்கு பயணிக்கின்றனர்.
இதனால் அவர்களுக்கான பயணத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வார இறுதியில் இந்த புதிய ரயில் சேவை முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கமைய எல்ல வீக் எண்ட் எஸ்பிரஸ் நுடடய றுநநமநனெ நுஒpசநளள நாளை முதல் சனிக்கிழமைகளில் காலை 5.30க்கு கொழும்பிலிருந்து பதுளை வகையிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கியும் இந்த புதிய ரயில் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.