முதல்வரின் போஸ்டரை கிழித்ததற்காக நாய் மீது முறைப்பாடு புகார்
முதல்வரின் போஸ்டரை கிழித்ததற்காக நாய் ஒன்றின் மீது பொலிஸில் புகார்
ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் உருவப்படம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கரை சுவரில் இருந்து கிழித்த நாய் மீது அக்கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் நகரில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை ஒரு நாய் கவ்வி கிழித்த எடுத்துள்ளது. இந்த சம்பவத்தைச் சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, ஸ்டிக்கரை கிழித்தது மூலம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை அவமதித்ததாகக் கூறி, அந்த நாயையும், அதன் உரிமையாளரையும் கைது செய்ய வேண்டும் என்று விஜயவாடாவில் உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பெண் தொண்டர்கள் இணைந்து அந்த நாய் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்