நானுஓயாவில் மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து!

-நுவரெலியா நிருபர்-

நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் , வெண்டிகோனர் பகுதியில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை, மோட்டார் சைக்கிளும், லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார்.

நுவரெலியா பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் ஹட்டன் பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த லொறி, மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளது.

மேலும் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக, நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர் .