நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு?

நாட்டில் ஒக்டேன் 95 ரக பெற்றோல் உள்ளிட்ட எந்தவொரு எரிபொருளுக்கும் தட்டுப்பாடு இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம்  570 மெற்றிக் டன் ஒக்டேன் 95 ரக பெற்றோலை கொள்வனவு செய்துள்ளதாக இலங்கை கனியவள மொத்த களஞ்சிய முனையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒக்டேன் 95 ரக பெற்றோல்  தட்டுப்பாடு நிலவியதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், தற்போது ஒக்டேன் 95 ரக பெற்றோல்  போதுமான அளவு உள்ளதாக இலங்கை கனியவள எரிபொருள் களஞ்சிய முனையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரையான காலப்பகுதியில் 41 பில்லியன் இலாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்