நாட்டின் நிலை தொடர்பில் ஆராய கிழக்கின் கேடயம் மக்களை சந்தித்தது
-கல்முனை நிருபர்-
இலங்கையில் இப்போது நடைபெற்று வரும் சமகால அரசியல், பொருளாதார நிலவரங்கள் தொடர்பில் ஆராயும் மக்கள் சந்திப்பு கிழக்கின் கேடயம் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றில் செவ்வாய்க் கிழமை மாலை இடம்பெற்றது.
கிழக்கின் கேடயம் அமைப்பின் தலைவரும், அக்கறைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ் எம் சபீஸ் அவர்களுடன் பொதுமக்கள், இளைஞர்கள் கலந்துரையாடினர்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண அரசியல் சூழ்நிலைகளினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், நீண்ட வரிசைகள், பொருள் தட்டுப்பாடுகள், பணவீக்கம், இதனால் இலங்கை எதிர்கொண்டிருக்கும் சவால்கள் மக்கள் சந்தித்திருக்கும் கஷ்ட நிலைகள் இதன்போது ஆராயப்பட்டதுடன்.
இக்கட்டான இவ்வேளையில் மக்கள் பொறுப்புடனும் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு முறையாக திட்டமிட்ட நடைமுறைகளை பின்பற்றுதல் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
இஃப்தாருடன் நிறைவுபெற்ற இந்த மக்கள் சந்திப்பில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிழக்கின் கேடயத்தின் நிர்வாகிகள், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.