நாக்கட்டு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய மஹோற்சவ பெருவிழா

பண்டாரியாவெளி (நாக்கட்டு) அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வசந்த மண்டப திருக்குட முழுக்கும் வருடாந்த மஹோற்சவ பெருவிழாவும் ஆலய வசந்த மண்டப திருக்குடமுழுக்கானது சோபகிருது வருடம் ஆணித்திங்கள் 4ம் நாள் கடந்த திங்கட்கிழமை விக்னேஸ்வரர் வழிபாடு, புண்யாகவாசனம், உணபதி ஹோமம், வாஸ்து  சாந்தி தூபிஸ்தாபணம் என்பன நடைபெற்று ஆத்திரங்கள் 05ம் நாள் கடந்த செவ்வாய்க்கிழமை முற்பகல் 4 மணி முதல் 10.24 மணி வரையுள்ள புணர்பூச நட்சத்திரமும் துதியை நிதியும் கூடிய சுபவேளையில் திருக்குடமுழுக்கு இனிதே இடம்பெற்றது.

அதன் படி இன்று ஞாயிற்றுக்கிழமை ஆணி உத்தரத்தை முன்னிட்டு பி.ப 04.30 மணியளவில் பால், பழம் வைத்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அத்துடன், பண்டாரியாவெளி, படையாண்டவெளி கிராம மக்களின் திருவிழாவினை சிறப்பிக்கும் முகமாக பண்டாரியாவெளி நாகர் கலை கழகம் பெருமையுடன் வழங்கும் “பக்காத்திருடன்” தென்மோடிகூத்து அரங்கேற்று விழா நாளை திங்கட்கிழமை காலை மு.ப 7 மணிக்கு ஆலய முன்றலில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த கூத்தானது கலாபூசணம். திரு. கு. பொன்னம்பலம் அண்ணாவியாரின் ஆசியுடனும் நெறிப்படுத்தலுடனும் ஞா.தம்பிராசா அண்ணாவியார், க.சிவஞானசெல்வம் அண்ணாவியார், இ.யோகிதன் அண்ணாவியார், உடன் இணைந்து இவ் வருடம் புதிதாக ச. யோதீஸ்வரன்(கட்டியன்), கு.துரைராசா(ராஜா), க.எழில்வேந்தன்(மந்திரி), சி.சுந்தர லிங்கம்(பக்கா திருடன்), சி.கோகுலவாணன் (சகுந்தலாவதி), த.யுகநாதன்(கால்திருடன், சற்குணாவதி, தாசி), கோ.கிருஷன் (நாசிவன்), யோ.சங்கீர்த்தனன் (நாசிவன் மகன்), சு.பிரணவராஜ்(ஊரவன்), சி.புவனசிங்கம்(செட்டி, முழுத்திருடன்), செ.தங்கராசா(பெரிய தலையாரி), ச.தனரோஜன்(அரைதிருடன்), த.கிருஸ்ணகாந்(தலையாரிமார்), இ.லிவிர்தன்(தலையாரிமார்), ச.மேகநாதன்(முக்கால்திருடன்) என்போரால் அரங்கேற்றப்படவுள்ளது.

என்போரால் அரங்கேற்றப்படவுள்ளது.

என்போரால் அரங்கேற்றப்படவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்