நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் கஞ்சாவுடன் கைது!

-யாழ் நிருபர்-

தமிழ் தேசிய கட்சியொன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர், இன்று செவ்வாய்க்கிழமை, 4 கிலோ 800 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியாலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த உறுப்பினர், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.