நலன்புரி கொடுப்பனவை பெற சென்றவர் மரணம்
யாழ்ப்பாணம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை நலன்புரி கொடுப்பனவை பெறச் சென்ற வயோதிபப் பெண்ணொருவர் திடீர் சுகவீனமுற்று மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியை சேர்ந்த அமிர்தலிங்கம் கமலேஸ்வரி (வயது – 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
</ul