நபர் ஒருவரை பெட்டி என தவறாக அடையாளம் கண்டு நசுக்கி கொன்ற ரோபோ
நபர் ஒருவர் ரோபோவால் நசுக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
40 வயதான குறித்த நபர் தெற்கு கியோங்சாண்ட் மாகாணத்தில் விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் ரோபோவின் சென்சாரை ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
அந்நேரம் ரோபோ மிளகு அடைக்கப்பட்ட பெட்டிகளை தூக்கிக் கொண்டிருந்தபோது, அந்த நபரை தவறாக பெட்டி என அடையாளம் கண்டுகொண்டது.
அதனைத் தொடர்ந்து குறித்த ரோபோவின் இயந்திர கை குறித்த நபரின் உடலை ஒரு கன்வேயர் பெல்ட்டில் தள்ளி, அவரது முகம் மற்றும் மார்பை நசுக்கியது.
அதன் பின் குறித்த நபர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று கடந்த மார்ச் மாதம், வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் போது 50 வயதுடைய தென் கொரியர் ஒருவர் ரோபோவிடம் சிக்கியதில் பலத்த காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்