நபரொருவர் அடித்துக் கொலை : தந்தையும் மகனும் கைது
நபர் ஒருவரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் தந்தை, மகன் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் கலேவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது
கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி கலேவெல நகரில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதே மாதம் 29ஆம் திகதி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொல்லப்பட்ட நபருக்கு எதிராக மாத்தளை நீதிமன்றத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளதுடன் தாக்குதலில் தொடர்புடைய நபர் ஒருவரே வழக்கில் முக்கிய சாட்சியாளர் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்