நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு?

கேரள மாநிலத்தில் கடந்த 24 ஆம் திகதி இரவு நடிகை லட்சுமி மேனனும் அவரது நண்பர்களும் மதுபானசாலை ஒன்றுக்கு சென்றுள்ளனர்.

அப்போது அவர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் லட்சுமி மேனன் தரப்பினர் தங்களிடம் தகராறு செய்த எதிர்தரப்பை சேர்ந்த ஒருவரை கடத்தி சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் லட்சுமி மேனனின் நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடிகை லட்சுமி மேனனிடம் விசாரணை நடத்த பொலிஸார் தீர்மானம் எடுத்துள்ளனர்.

ஆனால் அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் அவரைத் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.