தொல்பொருட்களுடன் சந்தேக நபர்கள் கைது

மினுவாங்கொடை – மாதமுல்ல பகுதியில் தொல்பொருட்களை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த (வயது 37) ஆண் சந்தேகநபர் ஒருவரும், மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த (வயது 41) பெண் சந்தேகநபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.