
தொகுப்பு நூல் வெளியீட்டு விழா
-கிண்ணியா நிருபர்-
வைத்தியர் அருமைநாதன் ஸதீஸ்குமார் எமுதிய முத்தமிழறிஞர் புண்ணியமூர்த்தி செல்லக்குட்டி தொகுப்பு நூல் வெளியீட்டு விழா வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு திருகோணமலை மாநகர சபை பொது நூலக மண்டபத்தில் சம்பூர் தமிழ்க்கலாமன்ற உறுப்பினர் கவிஞர். ம. சச்சிதானந்தம் தலைமையில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வின் முதன்மை அழைப்பாளராக முன்னாள் அதிபர் கலாபூஷணம் க. ஜெயநாதன், கெளரவ அழைப்பாளராக வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் கவிஞர். அ.அச்சுதன் மற்றும் எண்ணம்போல் வாழ்க்கை கலை மன்றத்தின் தலைவர் கனக. தீபகாந்தன் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இவ் விழாவில் எமுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
