தேர்த் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

 

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

தேரிலுள்ள கலசத்தில் மின்வடம் தட்டுப்பட்டு, சுமார் 50 கிலோ எடையுள்ள கலசம் கீழ் விழுந்ததாக தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்