
தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதானிகள் உட்பட 6 பேரிடம் வாக்குமூலங்கள்!
6ஆம் தர ஆங்கில பாட மொடியூலில் (Module) ஓரினச்சேர்க்கை இணையதளம் ஒன்றின் பெயர் (இணைப்பு) சேர்க்கப்பட்டமை தொடர்பான சம்பவம் குறித்து, தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதானிகள் உட்பட 6 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தக் குழுவில் தேசிய கல்வி நிறுவனத்தின் கல்விசார் விவகாரப் பிரிவு, மொடியூல் எழுத்தாளர்கள், அவற்றை மீளாய்வு செய்பவர்கள், பதிப்பாசிரியர்கள் மற்றும் மெய்ப்புப் பார்ப்பவர்கள் (Proofreaders) ஆகியோர் அடங்குவர்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அறிக்கை மற்றும் தேசிய கல்வி நிறுவனத்தின் மொடியூல் தயாரிப்பு செயல்முறை குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுக்கும் ரஞ்சித் ஆரியரத்ன குழுவின் அறிக்கை என்பன பெரும்பாலும் அடுத்த வாரம் கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்விடயம் குறித்து கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்னவிடம் வினவியபோது, தேசிய கல்வி நிறுவனத்தின் மொடியூல் தயாரிப்பு செயல்முறையை வலுப்படுத்துவதற்காக நிபுணர் குழுவொன்றின் ஆலோசனைகளைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
