தேசிய அளவிலான மூன்று விளையாட்டு சங்கங்களுக்கு பதிவுத் தடை

இலங்கையில் தேசிய அளவிலான மூன்று விளையாட்டு சங்கங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி, ஆகஸ்ட் 25, 2025 முதல் அமுலுக்கு வரும் வகையில், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் செயல்படும் மெய்வல்லுனர், மேசைப்பந்து மற்றும் ஜிம்னாஸ்டிக் சங்கங்களின் பதிவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், உத்தியோகபூர்வ தேர்தல் நடைபெறும் வரை, இந்த மூன்று சங்கங்களின் நிர்வாகத்தை மேற்பார்வை செய்வதற்காக விளையாட்டுத்துறை செயலாளரை அதிகாரியாக நியமித்துள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.