தேசபந்துவை பதவி நீக்கும் யோசனைக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாக வாக்களிக்க தீர்மானம்

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் யோசனைக்கு ஆதரவாக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மாஅதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்ததை ஆரம்பத்திலேயே ஐக்கிய மக்கள் சக்தி எதிர்த்ததுஎனவும் அவரது நியமனத்துக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது எனவும், அதனால் யோசனைக்கு ஆதரவு வழங்குவது இயல்பானதாகும் எனவும் அவர் கூறியுள்ளார் .

2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட தேசபந்து தென்னகோனை பதவி நீக்கும் யோசனை இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது .

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவது தொடர்பில் இதுவரையில் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை எடுக்கவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

தங்களது பாராளுமன்றக் குழு சரியான நேரத்தில் அது தொடர்பில் தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.