தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றில் ஆஜராகிறார்
கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார் .
2022 ஆம் ஆண்டு காலி முகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தேசபந்து தென்னகோன் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதேநேரம் தம்மைக் கைது செய்வதைத் தடுத்து உத்தரவிடுமாறு கோரி அவர் தாக்கல் செய்த முன்பிணை மனுவை, கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர நிராகரித்தார்.
இதனையடுத்து, போராட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவத்தில் சந்தேக நபர் எனப் பெயரிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் அவர் கைது நேற்று செய்யப்பட்டார்.