தெல்லிப்பழை பாலர் ஞானோதய சபையின் புதிய போசகராக பொறுப்பேற்ற தவத்திரு வேலன் சுவாமிகள்!

தெல்லிப்பழை பாலர் ஞானோதய சபையின் புதிய போசகராக பொறுப்பேற்ற தெல்லிப்பழை சிவகுரு ஆதீன முதல்வரும் தெல்லிப்பழை பாலர் ஞானோதய சபை பழைய மாணவனுமான தவத்திரு வேலன் சுவாமிகள் நேற்று வெள்ளிக்கிழமை தெல்லிப்பழை காசி விநாயகர் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தார்.

அவர், மாலை இடம்பெற்ற பூசை வழிபாடுகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பாலர் ஞானோதய சபை மாணவர்கள், பெற்றோர்களுடன் ஆன்மீக கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இதேவேளை எதிர்வரும் காலங்களில் மாதந்தோறும் தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தானத்தில் ஆன்மீக சொற்பொழிவுகளை தொடர்ந்தும் நடாத்தவுள்ளார்.