தெல்லிப்பளை வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர் விபத்தில் சிக்கி மரணம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக கடமை புரியும் பெண்ணொருவர் விபத்தில் சிக்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். வட்டு தெற்கு, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த ரவீந்திரன் கிருஷ்ணவேணி (வயது -52) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.

தாதிய உத்தியோகத்தர் கடந்த 26ஆம் திகதி இரவு கடமைக்காக மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்றுகொண்டிருந்தார். இதன்போது அராலி நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், விளான் சந்தி பகுதியில் அவரது மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இந்நிலையில் படுகாயமடைந்த குறித்த தாதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.