
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறை!
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2024 ஆம் ஆண்டு தோல்வியடைந்த இராணுவச் சட்ட அமுலாக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்த விசாரணை முடக்க விவகாரங்களில், தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
