துவிச்சக்கர வண்டியுடன் கார் மோதியதில் மாணவன் உயிரிழப்பு

கெக்கிராவ எப்பாவல பிரதான வீதியின் மஹஇலுப்பள்ளம பகுதியில் கார் ஒன்றும் துவிச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மஹஇழுப்பள்ளம பிரதேசத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவன் மீது மோதிய கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் பின்னர், மாணவன் சேனாபுர பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் அதற்கு முன்னதாகவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்