துறைமுக வளாகத்திற்குள் ஏலக்காய் திருட்டு
கொழும்பு துறைமுக வளாகத்திற்குள் வைக்கப்பட்டிருந்த கொள்கலனை உடைத்து அதிலிருந்து 25 இலட்சம் ரூபா மதிக்க தக்க 9 ஏலக்காய் பெட்டிகளை திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரகம மற்றும் இப்பலோகம பகுதிகளைச் சேர்ந்த 39 வயதுக்குட்பட்ட மூவரே இது தொடர்பில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருடப்பட்ட ஏலக்காய் தொகை வைக்கப்பட்டிருந்த கொள்கலன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர்களை இன்று திங்கட்கிழமை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்