துப்பாக்கிச் சூடு : 9 பேர் பலி
அமெரிக்காவில் வணிக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆலன் பிரீமியம் அவுட்லெட்ஸ் வணிக வளாகத்தில் மக்கள் பொருள்களை கொள்வனவு செய்து கொண்டிருக்கும் போது துப்பாக்கியுடன் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாத நிலையில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.
இதுகுறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்