துப்பாக்கிகளை கோரும் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக தங்களுக்கு துப்பாக்கிகளை வழங்குமாறு 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற குழு தலைவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் கோரிக்கைகள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் மாஅதிபர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

கலந்துரையாடலைத் தொடர்ந்து, சபாநாயகர் மற்றும் பொலிஸ் மாஅதிபர் இருவரும் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் துப்பாக்கிகளை வழங்குவதை ஆராய்வதாகவும் கூறியுள்ளனர்.

இருப்பினும், பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் துப்பாக்கிகளை வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

தற்போதுள்ள அச்சுறுத்தல்களை ஆராய்ந்த பின்னர் துப்பாக்கிகளை வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.