துப்பாக்கி சூடு : ஒருவர் காயம்
கடவத்தை தவட்டகஹவத்தை பகுதியில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சூரியபாலுவ பகுயை சேர்ந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
காணித்தகராறு காரணமாக காயமடைந்தவரின் மகன் உள்ளிட்ட மூவரே நேற்று வியாழக்கிழமை இரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்