திறைசேரி உண்டியல்கள் ஏலம்விடும் திகதி பிற்போடப்பட்டுள்ளது

ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மில்லியன் ரூபாய் மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள்  எதிர்வரும் 10ஆம் திகதி ஏல விற்பனை ஊடாக வழங்கப்படவுள்ளதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த ஏலத்திற்கான திறைசேரி உண்டியலின் தீர்ப்பனவு திகதி எதிர்வரும் ஜுலை மாதம் 4ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

எனினும்  முன்னதாக எதிர்வரும் 30ம் திகதி இந்த ஏலத்திற்கான தீர்ப்பனவு திகதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  குறித்த திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் எதிர்வரும் 30ம் திகதி விசேட வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 27ம் திகதி இடம்பெறவுள்ள திறைசேரி உண்டியலின்  தீர்ப்பனவு திகதி எதிர்வரும் ஜுலை மாதம் 4ம் திகதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்