திருமலையில் வேட்டைத் திருவிழா
திருக்கோணமலை கடலோரத்தில் அருள்பாலிக்கும் திருக்கடலூர் அருள்மிகு காளியம்மன் கோவில் மகோற்சவம் கடந்த 18ஆம் நாள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வெகு விமர்சையாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று சனிக்கிழமை அம்பாள் குதிரை வாகனத்தில் வந்து வேட்டையாடும் வேட்டைத் திருவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்வின்போது அம்பாள் திருக்கடலூர் கடற்கரையில் எழுந்தருளி காட்சி தந்து அருள்வார். இந்த வேட்டைத் திருவிழா திருக்கடலூர் விபுலானந்தா இளைஞர் சங்கத்தினால் நடாத்தப்பட்டது.