திருமலையில் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது
-ரவ்பீக் பாயிஸ்-
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 99 ஆம் கொலனி பிரதேசத்தில் வைத்து 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தம்பலகமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹைரியா நகர் புல்மோட்டை -1 என்ற இடத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர் எனவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த சந்தேகநபர் 500 கிராம் கேரள கஞ்சாவை விற்பனை செய்வதற்காக தம் வசம் வைத்திருந்து விற்பனைக்கு முயன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக தம்பலகாமம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 44 வயதுடைய சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்