திருமணம் முடிந்து ஓராண்டு: உடல் உறவுக்கு மறுக்கும் கணவன்

இந்தியாவின் கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தை சேர்ந்த நபருக்கும், மாண்டியா மாவட்டத்தில் வசித்து வந்த 21 வயது பெண்ணுக்கும் இடையே ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில், அந்த பெண் பரப்பன அக்ரஹார பொலிஸாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர், தன் திருமணம் முடிந்து ஓராண்டான போதும், கணவர் தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்வதில்லை என்றும், தனக்கு அவர் விவாகரத்து அளிக்கவும் மறுக்கிறார் என கூறப்பட்டுள்ளது.

மேலும், திருமணத்திற்கு முன்பு இரு வீட்டாருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது என்றும், இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும், தான் இந்த திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இல்லை என தெரிவித்துள்ளார்.

அவர் அடிக்கடி கோவப்படும் நபராக இருக்கிறார் என்றும், தான் நெருங்கி சென்று அன்பாக பேசினால் கூட அவர் சரியாக பேசுவதில்லை என்றும் என்னுடைய வாழ்க்கையை அவர் சீரழித்து விட்டார் எனவும் புகாரில் கூறியுள்ளார்.

மேலும் இந்த திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ள தான் விவாகரத்து கோரினாலும், அவர் கையெழுத்திட மறுக்கிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், கடந்த மாதம் உத்தர பிரதேசத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றம், வாழ்க்கை துணையுடன் நீண்ட காலம் உடலுறவை மறுப்பது, அவர்களை மனரீதியாக துன்புறுத்துவதற்கு சமம் என்று ஒரு விவாகரத்து வழக்கில் தெரிவித்திருந்தது. அத்துடன் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் இணைந்து வாழும் தம்பதிக்கு இடையே, ஓராண்டாக உடலுறுவுக்கு மறுப்பது என்பது கொடூரத்திற்கு சமம் என கூறியிருந்தது குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்