திருகோணமலைலில் தேசிய பிறப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

-கிண்ணியாநிருபர்-

கிழக்கு மாகாண பதிவாளர் நாயக திணைக்களம் ஏற்பாடு செய்த தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் ஒரு பகுதி திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.

இது இலங்கை அரசின் பிறப்பு சான்றிதழ் வழங்கும் முறையை மின்னணு வடிவத்திற்கு மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இணைய வழி டிஜிட்டல் சேவைகள் ஊடாக சான்றிதழ்களை இத் திட்டம் ஊடாக பெற முடியும்.

குறித்த நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயல பிரிவு, குச்சவெளி, மொறவெவ,கோமரங்கடவெல, தம்பலகாமம், கந்தளாய்,கிண்ணியா போன்ற பிரதேச செயல பிரிவில் உள்ள தெரிவு செய்யப்பட்டவர்கள் இதன் போது சான்றிதழ்களை அங்குரார்ப்பண வைபவத்தின் போது பெற்றுக் கொண்டனர்.

குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார, பிரதி பதிவாளர் நாயகம் கே.நடராஜா, காணி பதிவாளர் எஸ்.பண்டார, மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் பிரதேச செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.