திருகோணமலையில் பிரதேச செயலகப் பங்கேற்புடன் மக்கள் சேவை மன்றத்தினால் நிரந்தர வீடுகள் வழங்கி வைப்பு

திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வாழ்வதற்கான தங்குமிட வசதிகள் மேம்படுத்திக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தம்பலகாமம் பிரதேசத்தில் மேலும் 15  நிரந்தர வீடுகள் கையளிக்கும் நிகழ்வு மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாரிஸ் தலைமைளில் இடம்பெற்றது.

யுத்தம் மற்றும் பொருளாதார கஸ்ட நிலமைகளில் நிரந்தர மற்றும் பாதுகாப்பு வீடுகள் இல்லாது பல கஸ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்து வந்த 40 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் புதன்கிழமை தம்பலகமம் பிரதேச செயலகத்தின் பங்கேட்புடன் பயனாளிகளுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டது.

சிலி நாட்டைத் தலைமையமாகக் கொண்டு இயங்கி வரும் சர்வதேச தொண்டு நிறுனமான செலவிப் பவுன்டேசன் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் மேற்படி நிரந்தர வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தம்பலகமம் பிரதேச செயலளார் திருமதி. ஜெ. ஸ்ரீபதி அவர்கள் பிரதம அதிதியாகவும், தம்பலகமம் உதவிப் பிரதேச செயலாளர் இரா. பிரசாந்தன் அவர்களும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், மக்கள் சேவை மன்ற உத்தியோகத்தர்கள், சமூகமட்ட நிறுவனப் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் பிரதேச செயலகப் பங்கேற்புடன் மக்கள் சேவை மன்றத்தினால் நிரந்தர வீடுகள் வழங்கி வைப்பு
திருகோணமலையில் பிரதேச செயலகப் பங்கேற்புடன் மக்கள் சேவை மன்றத்தினால் நிரந்தர வீடுகள் வழங்கி வைப்பு