திருகோணமலையில் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்

திருகோணமலை குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் சுத்தம் செய்யும் சிரமதான நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம் பெற்றது.

குச்சவெளி பிரதேச பொலிஸ் நிலையம், பிரதேச சபை மற்றும் ஜங்கில் பீச் ஊழியர்கள் இணைந்து வெளிப்புற சுத்தத்தை மேற்கொண்டனர்.

இதில் பிளாஸ்டிக் பொருட்கள்,கடதாசி என கழிவுப் பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டு சூழலை பாதுகாக்கும் நோக்கில் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து அகற்றப்பட்டது.

இதில் குசுசவெளி பிரதேச சபை உறுப்பினர் றஹ்மான் யூசுப்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,இராணுவப் படை அதிகாரிகள்,வைத்தியசாலையின் ஊழியர்கள் ,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

திருகோணமலையில் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்