திருகோணமலை வீர நகர் பகுதியில் கடலறிப்பால் மூன்று வீடுகள் சேதம்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீர நகர் கரையோர பகுதியில் கடும் சீரற்ற கால நிலை காரணமாக நேற்று திங்கட்கிழமை மூன்று வீடுகள் கடலுடன் தாழ் இறங்கியுள்ளது.

குறித்த வீட்டில் வசிக்கும் 19 நபர்கள் உறவினர்கள்களின் வீடுகளில் வசித்து வருகின்றனர். தொடர்ந்தும் கடலின் அலை அதிகமான தாக்கம் காரணமாக குறித்த வீடுகள் மேலும் பாதிப்பினை ஏற்படுத்தும் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர் வரும் காலங்களில் இவ்வாறான சீரற்ற கால நிலை மோசமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் இது குறித்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்கள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்,திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ஊடாக கலந்துரையாடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.