
குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு
திருகோணமலை – கோமரங்கடவல பகுதியில் மதவாச்சி குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி இன்று திங்கட்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவன் குறித்த பகுதியைச் சேர்ந்த பேமரத்னகே உமேஷ் ஆலோக (வயது-15) என தெரியவந்துள்ளது.
வழமையாக நண்பர்களுடன் குளிப்பதற்கு செல்வதாகவும் இன்றும் பிற்பகல் 1.30 மணியளவில் வீட்டிலிருந்து சென்றதாகவும் பின்னர் உயிரிழந்த நிலையில் இன்றிரவு 8 மணியளவில் மீட்கப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மாணவன் கோமரங்கடவல மதவாச்சி சிங்கள வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி பயின்று வருபவர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.