திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த வைகாசி பொங்கல் விழா

 

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் வருடாந்தப் பொங்கல் விழாவானது வேதாகமமாமணி பிரம்ம ஸ்ரீ சோ. இரவிச்சந்திர குருக்கள் தலைமையில் எதிர்வரும் (29/05/2023) திங்கட்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் மாலை 3.00 மணியளவில் வளந்து வைக்கும் வைபவமும், இரவு 6.00 மணிக்கு பொங்கல் பூசையும் நடைபெறும்.

அடியார்கள் அனைவரும் முன்னதாகவே ஆலயத்திற்கு வந்து தத்தமது நேர்த்திகளை முடித்து பொங்கல் விழாவில் கலந்து அம்பாளின் திருவருளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

பொங்கல் நேர்த்தி செய்பவர்கள் நேர காலத்தோடு வந்து ஆலய வீதியில் தங்கள் பொங்கல் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதை காணக்ககூடியதாக இருக்கும்.

அன்றைய நாளில் அம்பாளின் திருவருளை பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்