திடீர் போராட்டத்தை ஆரம்பித்த நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர்கள்!

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியத்தினால் நாளை மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று புதன்கிழமை காலை 8 மணிமுதல் கம்பஹா பொது வைத்தியசாலையில் திடீரென ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர்களை கையொப்பமிட வேண்டாம் என கம்பஹா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வழங்கியிருந்தார்.

இந்த அறிவுறுத்தலுக்கு அமைய, இன்றைய தினம் அந்த வைத்தியசாலையின் சகல நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர்களும் தங்களது கடமைகளில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக அந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பிரச்சினை தொடர்பாக கம்பஹா பொது வைத்தியசாலை பணிப்பாளருடன் கலந்துரையாடிய போதிலும், அவர் அதற்கு உரிய பதில் வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, மே மாகாண சபையின் கீழ் உள்ள 31 வைத்தியசாலைகளில் நாளை வியாழக்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியத்தினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.