தாய்வான் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்: ஜப்பான் பிரதமர்

அண்டை நாடான தாய்வானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக சீனா உறவு கொண்டாடி வருகிறது எனவும் மேலும் தாய்வான் மீது போர் விமானங்களைப் பறக்கவிட்டு அச்சுறுத்தி வருகிறது எனவும்தாய்வான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் ஜப்பான் இராணுவம் மூலம் பதிலடி கொடுக்கப்படும் என ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி தெரிவித்துள்ளார் .

பாராளுமன்ற கூட்டத்தின் போது பிரதமர் இதனை குறிப்பிட்டார் .இது இரு நாடுகளுக்கு இடையே பெரும் விவாதப் பொருளாகியுள்ளது

ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்றார். ஆசிய நாடுகள் பயணத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் டோக்கியோவுக்கு சென்ற சனே தகைச்சியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது இருநாடுகளிடையே இராணுவ, பொருளாதார உறவுகள் தொடர்பில் பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.