
விஜய் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஜனநாயகன்”.
விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் இத்திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் மேனன் எனப் பலரும் நடித்துள்ளனர்.
சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து “ஜனநாயகன்” இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ஆம் திகதி, மலேசியாவின், கோலாலம்பூரில் நடைபெறவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் இது வெறுமனே “ஜனநாயகன்” இசை வெளியீட்டு விழாவாக இல்லாமல், விஜய் இதுவரை நடித்த திரைப்படங்களில் இருந்து முக்கியமான 30க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி “தளபதி திருவிழா” என்ற பெயரில் ஒரு Concert ஆக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிகழ்வில் சைந்தவி, திப்பு, அனுராதா ஸ்ரீராம், எண்ட்ரியா, சரண், ஹரிசரண், ஹரீஷ் ராகவேந்திரா, யோகி பி, விஜய் யேசுதாஸ் உட்பட பல இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு விஜய்யின் திரைப்படப் பாடல்களைப் பாட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனோடு சேர்த்து “ஜனநாயகன்” திரைப்படப் பாடல்களை வெளியிடவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
