
தலையில் தேங்காய் விழுந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் தலையில் தேங்காய் விழுந்ததால் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் வடக்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தம்பிராசா ஜெயச்சந்திரன் (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 12ஆம் திகதி கொக்கத்தடி மூலம் தென்னை மரத்தில் தேங்காய் பிடுங்கியுள்ளார், இதன்போது தோங்காய் அவரது தலை மீது விழுந்துள்ளது, இதை அவர் தனது மனைவியிடம் கூறியுள்ளார்.
அதன்பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார், இதன்போது அவர் மயக்கமுற்றுள்ளார், இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
