
தற்காலிகமாக மூடப்பட்டது சிலாபம் பொது வைத்தியசாலை
கனமழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
வைத்தியசாலை வளாகம் நீரில் மூழ்கியதன் காரணமாக அனைத்து மருத்துவ சேவைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த நோயாளிகள் இலங்கை விமானப்படையின் (Sri Lanka Air Force) ஹெலிகொப்டர்கள் மூலம் கொழும்பு மற்றும் புத்தளம் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வெள்ள நீர் போதுமான அளவு குறைந்தவுடன், மற்ற நோயாளிகள் வாரியப்பொல மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
