தரம் 5 புலமை பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு!

பாடசாலைகளுக்கு மாணவர்களை தேரிந்தெடுப்பதற்காகவும் உதவி பணம் வழங்குவதற்காகவும் நடாத்தப்படும் தரம் 5 மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை 2023 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் நடைபெறும் திகதி இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தரம் 5 மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சையானது 2023 ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதுடன் இதற்கான விண்ணப்ப படிவங்கள் 06.07.2023 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்கப்பட வேண்டும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலதிக விபரங்கள் :-

தொலைபேசி இலக்கம்   : 011-2784208, 011-2784537, 011-2786616, 011-2786200, 011-2785202

நேரடி தொலைபேசி இலக்கம்  : 1911

தொலைநகல் இலக்கம்  :  011-2784422

தபால் முகவரி :   பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு                                      கிளை, இலங்கை பரீட்சைகள் திணைக்களம், பெலவத்தை, பத்தரமுல்ல

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்