பாடசாலை மாணவனை கடத்த முயற்சி

திருகோணமலை பாலையூற்று பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவரை கடத்த முயற்சித்ததாக திருகோணமலை தலைமையக பொலிஸாருக்கு நேற்று செவ்வாய்கிழமை முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த மாணவன் நேற்று மாலை 4 மணியளவில் தனியார் வகுப்பை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இவ்வாறு கடத்துவதற்கு முயற்சி இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வகுப்பு முடிந்த பின்னர் தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது நீல நிற வேனில் வந்த முகமூடி அணிந்த குழு ஒன்று தன்னை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றிச் செல்ல முற்பட்டதாகவும் அவர்களிடமிருந்து தான் தப்பி ஓடிவிட்டதாகவும் குறித்த மாணவன் தெரிவித்துள்ளான்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்