தமிழகம் காரைக்காலில் கிளிநொச்சி இளைஞன் கைது!
தமிழகம் காரைக்காலில் கிளிநொச்சி இளைஞன் கைது
உரிய ஆவணங்கள் எதுவுமின்றி தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த இலங்கையைச் சோ்ந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பொலிஸார் காரைக்கால் ரயில் நிலையத்தில் அண்மையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதே குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ளவர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த அஜந்தன் (35 வயது) என்பது தெரியவந்துள்ளது.
பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவரிடம் எந்த ஆவணமும் இல்லை என்பது தெரிய வந்தது.
கடந்த 2019-ஆம் ஆண்டு 6 மாத கால விசாவில் இந்தியா வந்ததாகவும், விசா காலம் முடிந்து இலங்கை திரும்பாமல், மேற்கு வங்கம், ஆந்திரா, டில்லி, கேரளா, தமிழ்நாடு என நாட்டின் பல பகுதிகளில் சுற்றித் திரிந்ததாகவும் தெரிவித்துள்ளாா்.பொலிஸார் அவரைக் கைது செய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தியுள்ளனர்.