தமது அறிக்கையை திரும்பப்பெற்றனர் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர்

-யாழ் நிருபர்-

சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கத்தின் உரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி நிறுத்தப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் நேற்று புதன்கிழமை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், ஒருவர் வெளியிட்ட தனிப்பட அரசியற் கருத்தின் அடிப்படையில் அவரைப் பல்கலைக்கழகத்திலே பேச அனுமதிக்கக் கூடாது எனப் பல்கலைக்கழக மாணவர்கள் நிருவாகத்துக்கு நெருக்குவாரம் கொடுத்தமை மிகவும் தவறான ஒரு செயல் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அந்த அறிக்கையில் பதிவிட்டது.

இந்நிலையில் இந்த அறிக்கைக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று  பல்கலைக்கழக வாயில்களை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் அந்த அறிக்கையை திரும்பப்பெற்றதையடுத்து மாணவர்களின் போராட்டம் நிறைவுக்கு வந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்