
தபால் மூல வாக்களிப்புக்கான மூன்றாவது நாள்
உள்ளூராட்சிமன்ற தேர்தல்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் மூன்றாவது நாளாக இடம்பெறுகின்றது.
இந்த ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பானது ஏப்ரல் 24 ஆம் திகதி ஆரம்பமாகியது.
இந்தமுறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்காக 663,499 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவற்றில் 648,490 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன
குறித்த தினங்களில் தபால் மூல வாக்களிக்கத் தவறியவர்கள் இன்று திங்கட்கிழமை, நாளை செவ்வாய்க்கிழமை வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்திருந்தார்.
இதேவேளை தபால் மூல வாக்குக்களை அளிக்க ஒதுக்கப்பட்ட நேரம் நீட்டிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்